உண்மையை சொன்னால்
உன்னை பற்றிய கவிதைதான் ..
உன் அசைவுகளை
வரிகளாக்குகிறேன்..
உள்ளத்தில் பட்டத்தை உள்ளபடி
உரைக்கபோகிறேன்..
உன் உதடுகள்
பேசத்தேவையில்லை .
அசைந்தாலே போதும் .
நான் ஆயிரம் கவிதைகள்
எழுதுவேன் ...!!
அடுத்த வரி கவி என்னென்று தெரியவில்லை
அவள் விழிக் கவிதையால்
மொத்தம் தொலைந்து போனேன்
பஞ்சம் இல்லாமல் எழுத்துக்கள் இருந்தும்
அவள் கருவிழி பார்த்ததும்
நான் கஞ்சம் பார்க்கிறேன்.....
காதலை எல்லாருக்கும் பிடிக்கும்
ஆனால் காதலுக்கு தான்
எல்லோரையும் பிடிக்கவில்லை.
உன்னை இழந்த பிறகு
வரும் கண்ணீர் எவ்வளவு உண்மையே
அதே அளவு உன்னை நேசித்தேன்
என்பதும் உண்மை பெண்ணே...
வாழ்க்கை ரொம்ப விசித்தரமானது ..
இங்கு சிரிப்பவர்களை விட
சிரிப்பதை போல் நடிப்பவர்கள் அதிகம் ...
வாழ்க்கை வாழ கற்று தருகிறதே இல்லையே
நடிக்க நல்ல கற்று தருகிறது ...
நானே நினைத்தாலும்
விடுவிக்க முடியாதுன்னை
வேண்டாமென உன்னை நினைத்தால்.
வெளியேறு அது உன் சுதந்திரம்
ஆயினும் வேண்டும் நீ,
இல்லையேல்
வாழும் உன் நினைவுகளில்
நிரந்திரமாய்...
நீ தந்த காதலை எல்லாம்
கவிதையாய் எழுதிவிட்டேன்.
நீ தந்த சோகங்களை எல்லாம்
சேர்த்து வைத்து இருக்கிறேன்
சொந்தமாக ஒரு பாடல் எழுத..
சாத்தியமா உன் மேல் கோபம் கிடையாது
சாதி,மதம்,ஏழை,பணக்காரன் என்று பல
இடையூறுகளை ஏற்படுத்தி வைத்துள்ள
சமூகத்தின் மேல் தான் என் கோபம் எல்லாம்.
எப்படியும் சொல்லுவேன் என் எழுத்துக்கள் வழியாய்..
காதலின் அர்த்தம் உணர்ந்தேன்.
நீ தந்த காயத்தோடு ..
பிரிவின் அர்த்தம் உணர்கிறேன்.
நீ தந்த தனிமையோடு ...
இத்தனை வலிகளின் மத்தியிலும் புன்னகைக்கிறேன்
நீ என் கவிதைகளை கவனித்துக்கொண்டிருக்கிறாய்
என்ற நம்பிக்கையினால்.