இது என்ன புன்னகை ?



இது என்ன புன்னகை ?
மின்னல் காடுகள்
மொத்தமாய் குத்தகை !

பார்வைகளோடு அழகினை
சேர்த்து தைக்க எங்கு கற்றாயோ ?
புன்னகையில் பூக்களை
கோர்த்து வைக்க எங்கு கற்றாயோ ?

உனக்கு மட்டுமே இயற்கை இலவசமாக
பாடங்கள் எடுக்கிறதோ ?
உன்னிடம் மட்டுமே அழகு
அடிமையாகி கிடக்கிறதோ..

மழையின் சலசலப்பை
ரசிக்கா மனம்..
உன் சிரிப்பின் சலசலப்பில்
விழுமே தினம்..
உன் ரோஜாப்பூ முகம் பார்த்தால்
மறையுமே ரணம்..

அழகு உன் விழிகளுக்குள்
ஒளிந்து கொள்ளவும்
வளைந்து செல்லவும் நினைக்கிறது..

அழகு உன் இதழ்களில்
புகுந்து கொள்ளவும்
படர்ந்து செல்லவும் நினைக்கிறது..

நீ மட்டுமே பிரபஞ்ச பேரழகி என
கத்தி கத்தி கதைக்கிறது..

உன் அழகிய வதனம்
கல் நெஞ்சங்களையும் நொடியில்
கரைக்கிறது..

இப்படி சிரித்துவிட்டால்..
தென்றலின் ஸ்பரிசமாய் குளிர்கிறாய்..
சிரிக்காவிடின்..
பரிதியின் வெயிலாய் சுடுகிறாய்..

No comments:

Post a Comment