
அழகின் மறுஉருவம்!
அன்பின் திருஉருவம்!
வானிலவும் ஏங்கி தவிக்குது!
வானவில்லும் வந்து வியக்குது!
உச்சி முதல் பாதம்வரை ஓரலகு!
உள்ளமோ பேரழகு!
மெச்சி அவள் நிழல் தொட்டே
மெய் சிலிர்த்து போனேன்
மயில் ஆடும் கண்கள்!
மனமோ மார்கழி திங்கள்!
குயிலிசை பேச்சு!
குணமோ உயிர் மூச்சு!
நெற்றி வகிடில் நேர்மையும்!
நெற்றி பொட்டில் பெண்மையும்!
காப்பிய கவிஞர்கள் காதலித்து
கவிதை படைத்த நாயகி!
கலைகளின் அரசி!
காவியத்தலைவி!
காத்திருப்பால் கனவோடு!
காதலன் என் ( ஜெர்ரி ) நினைவோடு!
புன்னகை மொழி பேசிடும்!
பூக்களின் மணம் வீசிடும்!
இயற்கை எழில் கொஞ்சிடும்!
இனியவள் என்னவள்!!!
அழகோ அழகு!!
அவளோ பேரழகு!!!
No comments:
Post a Comment