காதலே காதல் கொண்டது



பெருமை பேசாதவள்...
குணத்தால் பேர் பெற்றவள்...
கனிவால் கவனம் பெற்றவள்...
நம்பிக்கையால் நாளும் வாழ்பவள்...
தைரியத்தின் மகளாய் இருப்பவள்...
தப்பித்தங்களை சுட்டெரிப்பவள்...
நட்பினை ஏமாற்ற தெரியாதவள்...
துரோகச் செயல்களை அறவே வெறுப்பவள்...
தன்மானம் தவறா உறுதி கொண்டவள்...
உள்ளும் புறம்பும் அழகைக் கொண்டவள்...
வீண் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காதவள்...
அன்பின் இலக்கணம் முழுமையாகக் கற்றவள்...
மரியாதை தரும் மாண்பை கொண்டவள்...
காதல் இவளிடம் காதல் கொண்டது...

No comments:

Post a Comment