நானே நினைத்தாலும்
விடுவிக்க முடியாதுன்னை
வேண்டாமென உன்னை நினைத்தால்.
வெளியேறு அது உன் சுதந்திரம்
ஆயினும் வேண்டும் நீ,
இல்லையேல்
வாழும் உன் நினைவுகளில்
நிரந்திரமாய்...
நீ தந்த காதலை எல்லாம்
கவிதையாய் எழுதிவிட்டேன்.
நீ தந்த சோகங்களை எல்லாம்
சேர்த்து வைத்து இருக்கிறேன்
சொந்தமாக ஒரு பாடல் எழுத..
சாத்தியமா உன் மேல் கோபம் கிடையாது
சாதி,மதம்,ஏழை,பணக்காரன் என்று பல
இடையூறுகளை ஏற்படுத்தி வைத்துள்ள
சமூகத்தின் மேல் தான் என் கோபம் எல்லாம்.
எப்படியும் சொல்லுவேன் என் எழுத்துக்கள் வழியாய்..
காதலின் அர்த்தம் உணர்ந்தேன்.
நீ தந்த காயத்தோடு ..
பிரிவின் அர்த்தம் உணர்கிறேன்.
நீ தந்த தனிமையோடு ...
இத்தனை வலிகளின் மத்தியிலும் புன்னகைக்கிறேன்
நீ என் கவிதைகளை கவனித்துக்கொண்டிருக்கிறாய்
என்ற நம்பிக்கையினால்.
கல் நெஞ்சம் படைத்தவரை
காதல் விடுவதில்லை !!
காமம் என்கிற போர்வையில்
மெய் காதல் வருவதில்லை !!
தேடி வரும் காதல் கசப்பதில்லை !!
தேடி அலையும்
காதல் அமைவதில்லை !!
சாதியை காதல் மதிப்பதில்லை !!
நன்றியை காதல் மறப்பதில்லை !!
மறைந்த காதல் இறப்பதில்லை !!
பிரிந்த காதல் மறப்பதில்லை !!
#படித்ததில்_பிடித்தது
நிஜத்தில் தத்தளித்து!
கனவுகளில்
கரையொதுங்குகின்றன!
என் கற்பனைக்காதல்..
உன்னை பார்த்ததும்
பூத்தது எனக்குள்
பூக்கள் அல்ல -
உன் புன்னகையின் பிம்பங்கள்,
வேண்டும் நீ
இல்லையேல் வாழும்
உன் நினைவுகளுடன்
என் உயிர்...
அழகான பெண்கள் ஆயிரம்
பேர் பிறக்கலாம் ..
ஆனால் அவை அனைத்தும்
அவளாக முடியாது ..
அழகு என்பது உடம்பில் உள்ள
தோளில் இல்லை
அடுத்தவர்கள் உணர்வுகள்
மதிப்பதில் இருக்கிறது
பெருமை பேசாதவள்...
குணத்தால் பேர் பெற்றவள்...
கனிவால் கவனம் பெற்றவள்...
நம்பிக்கையால் நாளும் வாழ்பவள்...
தைரியத்தின் மகளாய் இருப்பவள்...
தப்பித்தங்களை சுட்டெரிப்பவள்...
நட்பினை ஏமாற்ற தெரியாதவள்...
துரோகச் செயல்களை அறவே வெறுப்பவள்...
தன்மானம் தவறா உறுதி கொண்டவள்...
உள்ளும் புறம்பும் அழகைக் கொண்டவள்...
வீண் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காதவள்...
அன்பின் இலக்கணம் முழுமையாகக் கற்றவள்...
மரியாதை தரும் மாண்பை கொண்டவள்...
காதல் இவளிடம் காதல் கொண்டது...
உனக்காக அழுத நாள்கள் கடந்து
இப்போது
உன்னால் அழுகிறேன்...
ஆசைப்பட்டதற்காக அன்றும்,
அதிகமாக
அன்பு வைத்ததற்காக இன்றும் அழுகிறேன்..
என் வாழ்க்கையின் அத்தியாமே அழுகை தான் போல..
கவிதையாக நீ மாறினாய்
கவிஞனாக என்னை மாற்றினாய்
கவிதையை நேசித்த கவிதையே
இந்த கவிஞனையும் ஒருநாள்
நேசிப்பாய் என்று
காத்திருந்தேன்...!
காத்திருக்கிறேன்...!!
காத்திருப்பேன்...!!!
பூக்களே ஆடைகளாய்
புன்னகையே அணிகலனாய்
கூந்தல் அருவியை நீந்தவிட்டு
குதிக்கும் மீன்களை கண்களாக்கி
புருவம் இரண்டை வில்லாக்கி
என் இதயத்தை இரண்டாக்கி
என் கண்களோடு போர் செய்யும் இவள்
எந்த நாட்டு இளவரசி?
காதல் சுகமானது மட்டும் இல்லை
வலிகளும் நிறைந்தது என்பதை
அவள் விட்டு சென்ற பிறகுதான் தெரிந்தது..
வாழ்க்கை ஏற்றத்தாழ்வை கொண்டது தான்
ஆனால் என் வாழ்க்கையில்
ஏற்றத்தை கொடுத்த அவளே
இறக்கத்தை கொடுப்பாள் என்று தான் எதிர்பார்க்கவில்லை...
நூலகம் முழுவதும்
தேடி அலைந்துவிட்டேன்,
நீ பார்த்த பார்வையின்
அர்த்தம் தேடி...
அகராதி என்று
சொல்லிக் கொண்ட
நூல்களெல்லாம்
அவமானம் கொண்டது
அர்த்தம் தெரியாமல் ,,,