என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை.. காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக என் கவிதை
காதல் தேவதை

வானில் நிலவு
உற்றுப் பார்ப்பது
உன்னைத்தானா...?
என் இரவுகளில் பொங்கி
நுரைக்கும் கனவுகன்னி
என் காதல் தேவதை...
அழகியே.

எத்தனை அழகு பெண்ணே உன்னிடம்..
வார்த்தைகள் எங்கே தேடுவேன் இல்லை என்னிடம்...
இருந்தால் தந்துவிட்டு செல் அழகியே...
மனதோடு ஒரு காதல்

எழுதி அழிப்பதற்கு
மணல் கவிதை அல்ல
நீ....!!!!
என் மனக் கவிதை...
உன்னோடு மண மேடையில்...
ஏறா விட்டால் என்ன???
உன் மன மேடையில்
ஏறினேனே அது போதும்..
இது என்ன புன்னகை ?
இது என்ன புன்னகை ?
மின்னல் காடுகள்
மொத்தமாய் குத்தகை !
பார்வைகளோடு அழகினை
சேர்த்து தைக்க எங்கு கற்றாயோ ?
புன்னகையில் பூக்களை
கோர்த்து வைக்க எங்கு கற்றாயோ ?
உனக்கு மட்டுமே இயற்கை இலவசமாக
பாடங்கள் எடுக்கிறதோ ?
உன்னிடம் மட்டுமே அழகு
அடிமையாகி கிடக்கிறதோ..
மழையின் சலசலப்பை
ரசிக்கா மனம்..
உன் சிரிப்பின் சலசலப்பில்
விழுமே தினம்..
உன் ரோஜாப்பூ முகம் பார்த்தால்
மறையுமே ரணம்..
அழகு உன் விழிகளுக்குள்
ஒளிந்து கொள்ளவும்
வளைந்து செல்லவும் நினைக்கிறது..
அழகு உன் இதழ்களில்
புகுந்து கொள்ளவும்
படர்ந்து செல்லவும் நினைக்கிறது..
நீ மட்டுமே பிரபஞ்ச பேரழகி என
கத்தி கத்தி கதைக்கிறது..
உன் அழகிய வதனம்
கல் நெஞ்சங்களையும் நொடியில்
கரைக்கிறது..
இப்படி சிரித்துவிட்டால்..
தென்றலின் ஸ்பரிசமாய் குளிர்கிறாய்..
சிரிக்காவிடின்..
பரிதியின் வெயிலாய் சுடுகிறாய்..
அழகி

ஐஸ்கிரீம் அழகி நீ தான் என்று
சட்டையும் அறிந்து இருந்தது..
சிலிர்க்கவைக்கும் பனித்துளி மீது
ரகசியமாய் ஒட்டி இருந்தது..
நதியோரம் நீ சென்றதால்
ஈரக்காற்றில் அழகின் வாசம்..
உன்னை எழுதும் நொடிகள்
காகிதமெல்லாம் கனவு தேசம்..
நகர்வொன்றும் இல்லையே
அந்த நதியினில்..
சிற்றலை மொத்தமும்
உன் சிகையினில்..
நீ பதித்த பாதச்சுவடுகளை
ஈர மண்ணும் சேகரிக்கும்..
பொக்கிஷமென காலமெல்லாம்
சிப்பிக்குள் பாதுகாக்கும்...
நீ பார்க்கும் திசையினிலே
நதியும் கரையேறும்..
நீ சென்றால் கடல்காற்றும்
தென்றலென உருமாறும்..
நீ வருவாயென வாடைக்காற்றும்
வரவேற்க தவம் இருக்கும்..
நீ வந்தபின்னே உறைந்து போய்
குளிரினை இழந்து நிற்கும்..
கோபம் ஏனோ ப்ரியா..
முகம் காட்ட மறுத்தாய்..
சிரிக்காத இதழிலும்
இதயம் சிக்க வைத்து பறித்தாய்..
தென்றல் நீ சென்றதால்
காற்றும் அங்கே இல்லையோ..
கொஞ்சம் தேடவே நினைத்தேன்..
உன் அடர் சிகைக்குள்
காற்றினை கண்டு எடுத்தேன்..
அங்கு சிகையினில் நெளியும்
தங்க அலைகள்..
இன்று அழகினை இழக்கும்
மெழுகு சிலைகள்..
உன்னாலே உன்னாலே..
அந்த மௌனமான
கரையின் ஓரம்..
இன்று ஏனோ
அழகின் கூச்சல்..
உன்னாலே உன்னாலே..
உன் விழியோரம் வழியும்
சின்னசின்ன பார்வைகளில்
என் கவிதைகள் ஆயிரம் அழகு பெரும்..
உன்னை பார்த்த நொடிகள் மட்டுமே
எங்கிருந்தோ வார்த்தைகள்
எனை தேடி ஓடி வரும்..
ஒரே ஒரு முறை
விழிகள் அசைத்துவிடு..
உன் அழகில் உறைந்த நதி
மீண்டும் உயிர் பெறட்டும்..
ஒரே ஒரு முறை
திரும்பி பார்த்துவிடு..
உன் நினைவில் துடிக்கா
இதயம் மீண்டும் இயங்கட்டும்..
கடலோர ஈரங்கள்
சூரியனில் காய்ந்து போகும்..
உன் விழியோர ஈரம் மட்டும்
என் காகிதத்தில் என்றும் வாழும்..
என் கிறுக்கல்கள் எல்லாம்
உன்னை மட்டுமே சேரும்..
உனக்காக மட்டுமே
என் கற்பனைகள் பிரபஞ்சம் மீறும்..
கத்த மறந்த கடல்..
கதை பேச மறந்த அலை..
மெல்ல வீச மறந்த காற்று..
ஈரமான மண்..
பார்க்க மறந்த கண்..
பொழிய மறந்த தூறல்..
முகம் சாய்த்த சாரல்..
மௌனமான தருணம்..
அமைதி அங்கு நிலவும்..
தனிமையான நேரம்..
இசையும் கூட பாரம்..
அங்கே இயற்கையும் நீயும்..
அழகே அழகு..
இப்படி கிறுக்க வைக்கும் நீ
யாரோ நீ யாரோ..
ப்ரியா நீ..
என் கவிதைகள் ப்ரியம் நீ..
பிரியா பவனி ஷங்கர்

இயற்கையில் இன்று
தங்க ஜரிகைகளை
கொட்டியது யாரோ ?
மின்னல் இன்றி
கொஞ்சும் சிரிப்பால்
இதயங்கள் வெட்டியது யாரோ ?
தங்க நிறமே..தங்க நிறமே..
சிறு பொட்டும் உன் நிறமே..
கண்ணுக்கு புலப்படாது போனால்
நட்சத்திரத்தின் அழகு குறையுமோ ?
உன் விழியில் மட்டுமே..
உன்னில் மட்டுமே..
நேசங்கள் நிறையுமோ ?
ஹைக்கூ விழியினில்
ரசிக இதயங்களை
தூக்கில் இடுகிறாய்..
தூக்கணாங்குருவி சிகையினில்
நொடியில் நினைவுகளை
முடிந்து விடுகிறாய்..
தங்கத்தேரும் தவமிருந்ததோ..
காதோரம் ஊஞ்சலாட..
தெளிதேனும் தேடி வந்ததோ
விழியோரம் விளையாட..
வளை அழகா..மோதிரம் அழகா..
நதிக்கரையில் பூக்களும் காற்றும்
ரகசிய உரையாடல்..
நீரில் பூக்கும் தாமரை
உன் விரலில் பூக்கும் போது
வாட மறுக்கின்றது..
வானில் வளையும் வானவில்
உன் கையில் வளையும் போது
மறைய மறக்கின்றது..
நதியும் ஜதி பாடும்..
நீளும் புருவங்கள் சொல்லிச்செல்கின்றன..
உன் இருவிழி..புதைகுழி..
என் கவிதைகள் மெல்லச்சாகின்றன..
காகிதத்தில் வழுகி விழுந்த
தங்க நிலவு நீ..
கற்பனைகளை எடுத்து வந்த
வண்ண தூரிகை நீ..
வார்த்தைகள் தொடுத்த தந்த
முல்லை வாசம் நீ..
உன் விழிப்பரப்பில்
பயணிக்கும் போது கவிதைகள் இலவசம்..
அழகின் மொழிபெயர்ப்பை
எழுதும் போது வார்த்தைகள் என் வசம்..
தங்க பதுமையாய் சிரிக்கும் நீ..
சித்திர பாவையாய் பறிக்கும் நீ..
நித்திரை கலைக்கும் கனவென நீ..
மார்கழி முடிந்தும் சிலிர்ப்பென நீ..
கதிரவன் விடிந்தும் நிலவென நீ..
ப்ரியா நீ..என் கவிதைகளின் ப்ரியம் நீ..
அவள் யாரோ

❣️❣️நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உன்னை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்..💗💖.
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்😍😍💓❣️
கவிதைக்கே கவிதையா??

நான் இருக்கும் போது
மட்டும் ஏன் கவிதை
எழுதுவது இல்லை என்கிறாள்..
ஆம்
அது எப்படி முடியும்?
ஒரு கவிதையை பக்கத்தில் வைத்துக்கொண்டு
இன்னொரு கவிதை எழுதுவதா?
தேவதை

சிறகுகள் மட்டும் இருந்திருந்தால்
உன்னையும் சேர்த்து இருப்பார்கள்
தேவதையாக விண்ணுலகத்தில்,
பரவாயில்லை
இப்போதும் நீ தேவதை தான்
மண்ணுலகத்தில் ...
அழகு

தான் அழகு என்பதை
பார்வையில் வெளிப்படுத்துவதை
விட
மற்றவர்களிடம் பழகுவதில்
உணர்த்திடும் பெண்களே
உண்மையான அழகு..!!
முதல் காதல் ..

எந்த போகி க்கும்
கொழுத்த முடியாமல்
மனதிலேயே தேங்கி
நிரந்தரமாய் தங்கிவிடுறது
அவரவர்களின்
முதல் காதல் ..
ஆசை

❣️😘ஏதேதோ ஆசை நெஞ்சுல
சொல்லத்தான் தெரியல
உன்னால கண்ணு தூங்கல
எதுக்குன்னு புரியல ❣️😍
கையால நானும்
மேகத்த தட்டுறவன்
நீ மட்டும் பார்த்த….
கை கட்டி நிக்குறவன்❣️
தனிமை

பேசிய வார்த்தைகளை
எல்லாம் பல முறை
பேசி பார்த்து கொள்கிறேன்!
எனக்குள்ளே,,,,
நீ பேசாத தருணத்தில்...
பயம்

தேர்வு எழுதவே பயந்தவன் நான்,
இன்று பக்கம் பக்கமாக எழுதிகிறேன்
எழுதுவது பிடித்தால் இல்லை
உன்னை பிடித்தால்...
ஆம்
எழுதுவது எல்லாம்
உன்னை பற்றி தானே
இதயம்

எனக்கும்
ஒரு இதயம் இருக்கிறது
என்பதை தெரிந்துக்கொண்டேன்.
அவளின் அன்பை ரசிக்க
ஆரம்பித்த பொழுதுதான்..
அசோக வனம்

இருக்குமிடம் அரக்கனில்லா
அசோகக வனம் தான்..
இருப்பினும்
இராமன் இல்லாமல்
சீதைக்கு ஏது சந்தோஷம்??
காதல் பெருளல்ல

தொலைத்து விட்டு தேட
அவள் ஒன்றும் பொருளல்ல..
அவள் ஒரு பொக்கிஷம்
தேடினாலும் கிடைக்காது என்று தெரிந்தும்
தெருவில் எறிந்து சென்றேன் ஏனோ.😥😥
காலை பொழுது

கண்ணை முடி நீ
கதிரவனை ரசிக்கையில் ..
களவாடி கொண்டு இருக்கிறான் .
கதிரவன் உன் ஆப்பிள் கன்னத்தை ..
முத்தம்

அவள் அனுமதியோடு
கொடுத்த முத்தம்
சக்கரை இல்லாத
சக்கர காப்பியைப்போல
சப்பென்று இருந்தது ..
அவளை அடக்கி
கொடுத்த முத்தம்
சக்கரையோடு சத்து மாவும்
கலந்த சக்கர கோல்டு
காப்பியைப்போல இருந்து ...
அழகு

என்னை பார்த்து
நான் போட்ட கோலம்
எப்படி என்கிறாய்
எப்படி சொல்லுவேன்
நீ போட்ட கோலத்தை விட
நீ தான் அழகு என்று..!
அவள் பெயர்

எனக்கான வார்த்தைகள் மட்டும்
சேர்த்து ஒரு புத்தகம் எழுதினேன்
பிரித்துப் பார்த்தால் பக்கங்களெல்லாம்
உன் பெயர் மட்டுமே...
பிடிக்கும் என தெரிந்தபின்
நேசிக்க என்ன காரணம்
இருந்து விட போகிறது பெரிதாய் ?
ஒரு வழி பாதை

நம்மை விலகி
செல்பவர்களுக்கு
ஒரு வழி பாதையை மட்டும்
திறந்துவிடுங்கள்
மீண்டும் வராத படி ..
காதல்

காதல் ஒரு முறை
மட்டுமே பிறக்கும் !
ஆனால்
காதல் செய்பவர்களை
ஒவ்வொரு நொடியும் கொன்று
கொண்டே இருக்கும்...
கவிதை

நான் எழுதுவது எல்லாம் கவிதை என்கிறார்கள்..
பாவம் அவர்களுக்கு எப்படி தெரியும்
நீ பேசுவதை தான் நான் எழுதுகிறேன் என்று..
தேவதை

வாடிடும் பூமியில் வான்மழையாய்
வாசனை பூக்களின் காதலியாய்
இவள் தான் யாரோ ...
யாரும் பார்க்காத ஒரு தங்கமான தேவதை
தேளில் சாய்ந்து உயிர் போனால்கூட தேவல..
சுவை அதிகம்

ஆடைகள் கலைந்தால் தானே
சுவைக்க எளிதாக இருக்கும்
சந்தேகக்காரியே
வீண் யூகங்கள் வேண்டாமடி
நீ விரும்பி குடிக்கும்
காபியை தான் சொன்னேன் ...
Subscribe to:
Posts (Atom)