அழகி


ஐஸ்கிரீம் அழகி நீ தான் என்று
சட்டையும் அறிந்து இருந்தது..
சிலிர்க்கவைக்கும் பனித்துளி மீது
ரகசியமாய் ஒட்டி இருந்தது..

நதியோரம் நீ சென்றதால்
ஈரக்காற்றில் அழகின் வாசம்..
உன்னை எழுதும் நொடிகள்
காகிதமெல்லாம் கனவு தேசம்..

நகர்வொன்றும் இல்லையே
அந்த நதியினில்..
சிற்றலை மொத்தமும்
உன் சிகையினில்..

நீ பதித்த பாதச்சுவடுகளை
ஈர மண்ணும் சேகரிக்கும்..
பொக்கிஷமென காலமெல்லாம்
சிப்பிக்குள் பாதுகாக்கும்...

நீ பார்க்கும் திசையினிலே
நதியும் கரையேறும்..
நீ சென்றால் கடல்காற்றும்
தென்றலென உருமாறும்..

நீ வருவாயென வாடைக்காற்றும்
வரவேற்க தவம் இருக்கும்..
நீ வந்தபின்னே உறைந்து போய்
குளிரினை இழந்து நிற்கும்..

கோபம் ஏனோ ப்ரியா..
முகம் காட்ட மறுத்தாய்..
சிரிக்காத இதழிலும்
இதயம் சிக்க வைத்து பறித்தாய்..

தென்றல் நீ சென்றதால்
காற்றும் அங்கே இல்லையோ..
கொஞ்சம் தேடவே நினைத்தேன்..
உன் அடர் சிகைக்குள்
காற்றினை கண்டு எடுத்தேன்..

அங்கு சிகையினில் நெளியும்
தங்க அலைகள்..
இன்று அழகினை இழக்கும்
மெழுகு சிலைகள்..
உன்னாலே உன்னாலே..

அந்த மௌனமான
கரையின் ஓரம்..
இன்று ஏனோ
அழகின் கூச்சல்..
உன்னாலே உன்னாலே..

உன் விழியோரம் வழியும்
சின்னசின்ன பார்வைகளில்
என் கவிதைகள் ஆயிரம் அழகு பெரும்..
உன்னை பார்த்த நொடிகள் மட்டுமே
எங்கிருந்தோ வார்த்தைகள்
எனை தேடி ஓடி வரும்..

ஒரே ஒரு முறை
விழிகள் அசைத்துவிடு..
உன் அழகில் உறைந்த நதி
மீண்டும் உயிர் பெறட்டும்..
ஒரே ஒரு முறை
திரும்பி பார்த்துவிடு..
உன் நினைவில் துடிக்கா
இதயம் மீண்டும் இயங்கட்டும்..

கடலோர ஈரங்கள்
சூரியனில் காய்ந்து போகும்..
உன் விழியோர ஈரம் மட்டும்
என் காகிதத்தில் என்றும் வாழும்..
என் கிறுக்கல்கள் எல்லாம்
உன்னை மட்டுமே சேரும்..
உனக்காக மட்டுமே
என் கற்பனைகள் பிரபஞ்சம் மீறும்..

கத்த மறந்த கடல்..
கதை பேச மறந்த அலை..
மெல்ல வீச மறந்த காற்று..
ஈரமான மண்..
பார்க்க மறந்த கண்..
பொழிய மறந்த தூறல்..
முகம் சாய்த்த சாரல்..
மௌனமான தருணம்..
அமைதி அங்கு நிலவும்..
தனிமையான நேரம்..
இசையும் கூட பாரம்..
அங்கே இயற்கையும் நீயும்..
அழகே அழகு..
இப்படி கிறுக்க வைக்கும் நீ
யாரோ நீ யாரோ..
ப்ரியா நீ..
என் கவிதைகள் ப்ரியம் நீ..

No comments:

Post a Comment