
நாழிகை காட்டும்
கடிகாரத்தின் அழகோ..
உன் பளிங்கு மாளிகை
சிரிப்பிற்கு முன்னே
தொலைந்தே போகிறது..💙
பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கும்
இதயங்களை இழுக்க
உன் அரைநொடி
புன்னகையே போதுமானது..🎶
விண்ணில் எழும்
மின்னல் பூக்களை..
நெஞ்சில் விதைக்க சொல்லி
கட்டளை இடும் கண்கள்
உனக்கே சொந்தம்..😍
விழிகளை சுருக்கி சிரிக்கிறாய்..
மழையில் நனைந்த
தொட்டாச்சிணுங்கிகளை
கண்ணிமைக்கும் தருணத்தில்
தோற்கடிக்கிறாய்..👌
உன்னை எழுதும் பேனா 🖊
மைக்கு பதிலாக கவிதைகளை
கொட்டும் ரகசியம்
உன் விழிகளுக்குள்
பொக்கிஷமாய்..❤
No comments:
Post a Comment