உன்னை பார்த்த பிறகு


💘என்னவளே அழகு என்று சொல்லவில்லை!
அவளை தவிற வேறுயாரும் அழகாய் தோண்றவில்லை எனக்கு..!!
காற்றுக்கு உருவம் இல்லை
என்று நினைத்து இருந்தேன்..
இன்று இரண்டு கண்களில் கண்டேன்!
என்னை கடந்து போன பூங்காற்றை..!
பூக்கள் பேசும் என்று
கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.
இன்று விழிகளை மறந்து
கண்டேன் பேசும் பூவை...!
வானவில்லை மேகத்தில்
பார்த்து இருக்கேன்.
இன்று இமைகள் மூடாமல்
கண்டு ரசித்தேன் சேலையில் வந்த வானவில்லை...!
அவள் கண்களில் கண்டேன்,
கவிதைகள் கொஞ்சி பேசும் அழகை,
அவள் இதழ்களில் கண்டேன்,
ஆயிரம் மின்னல்கள் பூத்து குலுங்கும் அழகை,
அவள் கூந்தலை தொட்டு விளையாடும், அந்த தென்றல் காற்றின் அழகை கண்டேன்,
அவளை கண்ட போது
திருவிழாவில் காணமல்போன
குழந்தை போல இதயம் பதறுகிறதே,
கவிதையை காகிதத்தில் எழுதி பார்த்து இருக்கேன்
இன்று கால் முளைத்த கவிதையை கண்டேன்..!
அவள் ஊரை கேட்ட போது
நான் வீட்டுக்கு செல்லும் பாதையை மறந்து போனேன்,
அவள் பெயரை கேட்ட போது என் பெயரை மறந்து போனேன்,
அவளோடு பேசிய பிறகு
என் இதயம் துடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே...!
உன்னை கண்ட பிறகு
என் வீட்டு கண்ணாடிக்கு
என்ன ஆனது என்று புரியவில்லை..!
என் முகம் காட்ட மறந்து
உன் முகத்தை காட்டி சிரிக்கிறது....!
உலக அதிசயங்கள் ஒன்று கூட இல்லை என்று நினைத்து இருந்தேன்...
உன்னை கண்ட பிறகு
உலகில் உள்ள ஏழு அதிசயங்களையும்
கண்டேன்...
விதியில் நீ வந்தபோது.

No comments:

Post a Comment