
அவள் மாறிவிட்டாள் என்று சொல்லி
என்னை நியாயப்படுத்த விருப்பமில்லை...
காலம் எல்லாத்தையும் மாற்றிவிட்டது .
அன்று காதலோடு கைகோர்த்து
அவளும் நானும் நடந்து சென்ற சாலையில்.
இன்று வெறும் காலுடன் நானும்
காரிலே அவளும் கடக்கிறோம்....
எவ்வளோ
மாற்றத்தை கொடுத்த காலத்தால் ... அவள்
மனதை மாற்ற முடியவில்லை ..ஆம்
அவள் அதே புன்னகையோடு வந்து பேசியபோது
தெரிந்துகொண்டேன் ..
No comments:
Post a Comment