அலைகடலில் அலையும் துடுப்பிழந்த படகாய்...
அலைகிறேனே அறிவாயா என் தவிப்பை அன்பே!!
அமைதியான மனதை அன்பெனும் அம்பால் தாக்கி..
அன்புக் கதைகள் பேசி அலைய விடுகின்றாய் நீ!!
இணையத் துடிக்குது என் இதயம்..!!
இரும்புத் திரையை துளைத்து என்னுள் வந்தவனே...
இறந்து போன என் உணர்வுகளை இன்பத் தமிழால் வருடியவனே!!!
உயிரோடுதான் இருந்தேன் ...உணர்வுகளற்ற ஜடமாக...
மல்லிகை போன்ற வெள்ளை உள்ளத்தை எனக்களித்து..
என் ஏக்கங்களை போக்கி இதமாக தாங்கும் நீ...
ஏன் அடிக்கடி மறைந்து போகிறாய்?
சீண்டி என்னை சோதிக்கும் உன் இன்ப கண்ணாமூச்சி
விளையாட்டினால் தொலைந்த தூக்கம்...
உன் அணைப்பில் உன் தோளில் சேரும் வரை..
தொடர்ந்து வருவாயா? தொலைந்து போவாயா?
மீளாத் தூக்கத்தில் நான் துயிலும் முன்???
No comments:
Post a Comment