
அவள் கம்பீரம் கூட அவள் சிரிப்பாலே
அழகு பெறும்...
கண்ணோடு கண் பார்த்தால்
எல்லாம் கடந்து போகும்..
அவள் இதழ் பேசும் முன்னே
அவள் விழி பேசும்...
அவள் விழி பேசும்
விழியோடு கொஞ்சும் தமிழ்
மொழியும் பேசும்..
அவள் வல்லினம் மெல்லினம்
எல்லாவற்றையும் கொடி இடையினில்
கட்டி வைப்பாள்...
நான் ரோஜா இதழை தேடி
பார்க்கிறேன்..
அதில் அவள் விழியழகை சேர்த்து
கவிதை கோர்க்கிறேன்!!!
நான் வானவில்லை கடன்
கேட்கிறேன்...
அவள் தமிழை வட்டியாக
கேட்கிறாள்...
நான் நிமிடங்களை நிறுத்த
நினைகிறேன்..
அவள் நினைத்தாலே இனிக்கும்
நினைவுகளை தந்து
போகிறாள்..
நான் தத்தையாக மாறி மெல்ல
மெல்ல ரசிக்கிறேன்...
அவள் தட்டானாக மாறி படையெடுக்கிறாள்...
மொத்தத்தில் முழுமதி முழு
பூமியையும் அபகரித்து விட்ட
அதிசயம் இது!!!
No comments:
Post a Comment