அழகானவள்



ஒரு மின்சார பதுமை
மின்னலை பதம் பார்த்தது...

அவள் நூலிலை பார்வை
நெஞ்சில் தூண்டிலை போட்டது!!!

ஒரு கண்ணாடி பேழை
மௌனமாய் அமர்ந்தது...

அவள் முன்னாடி நீரோட்டம்
அவளை படம் பிடித்து
உரைந்தது..

மழை நீர் சொட்டு சொட்டாய்
ஒன்றாகி இவள் உருவம் தந்தது..

நீலக்கடல் என்ற அர்த்தம்
இன்றே எனக்கு புரிந்தது...

நிசப்தம் எங்கே பிரியா
உன்னால் நிசப்தம் தொலைந்தது
இங்கே!!!

உருக்கும் பார்வை அதில்
உறையும் பாரி!!

சருக்கும் இதயம் அதில்
அதில் பட்டா போட்ட நீயோ
நித்தம் எழும் காவியம்!!!

No comments:

Post a Comment