
காற்றில்லா மரம் போலானேன்
கள்வன் என் விழி விழாத
உன் பிம்பம் தேடும் போதினிலே...!!!
நாழிகைகள் ஆமை நடை போட
சிந்தையும் அமைதி இல்லா
கடல் அலை போலாட...!!!
அமிழ்தமாய் இனிக்கும்
உன் குரல் கேளாததால்
செவி கேளாதவனானேன்...!!!
அகல் வீழ்ந்து சிறையாகி போனேன்
கரம் கொடு கனப்பொழுதில் எழுவேன்
உன் கண்ணொளி கானும் அவ்வேளையில்...!!....
No comments:
Post a Comment