
உன் உதட்டைப்
பார்த்த பின்
பூ பரிப்பதில்லை.
உன் கண் பார்த்த பின்
மீன் உண்ண மறுத்தேன்.
உன் கூந்தல் பார்த்த பின்
கருப்பின் அழகு தெரிந்தது.
உன் குரல் கேட்ட
பின் தான் இசை புரிந்தது
உன் தோற்றம் கண்ட போது
அழகு புரிந்தது.
நீ பிரிந்த போதுதான்
கவிதை பிறக்க வேண்டுமா?..
No comments:
Post a Comment