
கணிப்பொறியில் ஆங்கிலம்
கூட்டம் கூட்டமாய் எழுதி
கண்கள் பூத்துப் போயின பூமணி!
அழகிய தேவதையான உன்னைக் காண
முடியாமல் தனியறையில் சிறையடைப்பு.
இடைவேளை உன்னை பார்ப்பது மட்டுமே
பேசமுடியாமல் உன் தோழிகள் கூட்டம்
இரவு பணி முடிந்ததும் பேருந்தில் உன்
பக்கத்தில் அமர்ந்து ஏதாவது பேச ஆசை
தோழிகள் உன் பக்கத்து சீட்டில்.
தொலைபேசியில் வாட்ஸ்அப்பில்
பேச வழியில்லை உன் எண்ணில்லை
சாக்கு போக்குக்காவது உன்
கைப்பேசி எண்ணை சொல்வாயா?
உன் அழகு காட்சிகளை ரசிக்க.
எப்படியாவது உன்னிடம் பேசி
இந்த கணிப்பொறி சிறையான
பணியே வேண்டாம் விட்டுவிடுவோம்
நாம் இருவரும் காதலிக்கலாம்
என்று சொல்லத்தான் ஆசை.
நீ எப்போது பேசுவாயோ?
No comments:
Post a Comment