
"உன்னைப் பார்க்காமல்
என்னால் இருக்க முடியவில்லை
எங்காவது ஒரே ஓர் முறை
எப்படியாவது சந்திப்பாய்"
என்ற குருஞ்செய்திக்குப் பின்
"உன் மீது என் அன்பு பொங்குகிறது
அதற்கு முன் வெறும் தோழி
இப்போது காதலிக்கிறாய்.
என்னாலும் முடியாது தான்
உன்னைக் காணாமலிருக்க"
என்று நான் உனக்கு
குருஞ்செய்தி அல்ல
நான் வாட்ஸ் அப்பில்.
சிரிக்கிறேன் புல்லறிக்கப்பார்
என்று எழுதிவிட்டு வா என்று
இடத்தையும் குறிப்பிட்டேன்..
என் கார் நிர்ப்பதற்கு முன்
உன் மஞ்சள் ஸ்கூட்டி
எனக்காகக் காத்திருந்தது
என் காரிலிருந்து சரியாக
இறங்கள் கூட இல்லை
அப்படி ஓட்டம், ஓடிவந்தாய்.
எல்லோர் முன்னிலும் நீ
என்னைக் கட்டிப் பிடித்தாய்
இறுக அனைத்துக் கொண்டாய்
நான் விடுபடாமல் தவிர்க்கவில்லை.
எதற்கு என் மார்பில் புதைந்து
நிறைய அழுகிறாய்
என் சட்டையில் ஈரம் படிய.
உன்னை நிமிர்த்தினேன்
நீ பார்த்த அந்தப் பார்வை
சொல்லாமல் நீ இல்லாது
வாழவே முடியாது என்றது.
இதுதான் காதல் என்பதா?
இதுதான் காமம் என்பதா?
தெரியவில்லை, அது ஏன்?
சரி. நான் உன்னைக் காணாமலும்
நீ என்னைக் காணாமல் நாட்கள்
கடக்காது அத்தனைக் காதல்
நம்மில் நிறைந்து வழிகிறது
புரிந்துவிட்டது நமக்கு நன்றாய்.
சாதி, மதம், படிப்பு, வேலை
பொறுத்தமாக எல்லாம் இருக்காது
நாம் காதல்கள் அவ்வளவு தான்.
நீ பெண் சாதி என்றால்
நான் ஆண் சாதி மட்டுமே
நம் வாழ்வோம் நலமாக
என்று அனைத்துக் கொண்டேன்
வாழ்த்துங்கள் எங்களை எல்லோரும்...
No comments:
Post a Comment