
மழைக்கால நீலக்குருவி
காற்றில் சிறகடிக்க
நெஞ்சாங்கூட்டில் ரீங்காரம்.. 🎶
அழகிய செவ்விதழ்கள்
மகரந்த சிரிப்பை உதிர்க்க
இதயத்தில் கட்டியது கூடாரம்..🏠
தூரத்து நீலமேகம்
கொஞ்சும் அழகினில் நெஞ்சம் அள்ள..💙
இளவேனிற் கலாபம் ஒன்று
கண்களாலே கவிதைகள் சொல்ல..🖍🖍
சின்னஞ்சிறு சிரிப்பு அலைகள்
இதயங்களை வாரி செல்ல..❤
உலை கொதிக்கும் நெஞ்சத்தை
பச்சரிசி புன்னகை வெல்ல.
இவள் அழகை எப்படி தான் சொல்ல..😱
அதிகாலை பனித்துளிகளில்
முகம் கழுவிக்கொண்டாயோ..👌
தொடுவான நீலத்தை
ஆடையாக்கி கொண்டாயோ..💙
காற்று வாங்கத்தான் போனாயோ..
காற்றுக்கு அழகினை கடனாக தந்தாயோ..
நீலம் தழுவிய காற்று
தென்றலென மாறும்..
கீழிறங்கி செல்லேன்
இயற்கையும் தடுமாறும்..
உன் சிகை கலைத்த காற்று
கருமேகத்தில் கவிதை கிறுக்க..
அங்கே ஒரே நிசப்தம்..
சுவற்றில் மடக்கிய விரல்கள்
நெஞ்சம் வரை கதை பேச..
இதயத்தில் சொடுக்கு சத்தம்..
முகப்பூச்சு இல்லை..
நீலக்கடலுக்கு தேவையும் இல்லை..
முத்து சிரிப்பு போதுமே..
அணிகலன் இல்லை..
நீலவான் விரும்பியதும் இல்லை..
விண்மீன் விழிகள் போதுமே..
பின்னணி காட்சிகள் இல்லை..
இயற்கையை அழகாக்க
நீ மட்டும் போதுமே..
வீசும் காற்று..பேசும் கண்கள்..
பார்த்தாலே பூக்களின் வாசம்..
நீயே நீயே..நீயே நீயே
என் தூரிகைகளின் மாறா நேசம்..
விழித்தூரல்..நெஞ்சில் சாரல்.
சுவாசித்தாலே மண்வாசம்..
நீயே நீயே..நீயே நீயே
என் கற்பனை தேசங்களின் சுவாசம்..
மனதை மயக்கும் நீலாம்பரி..
நீலம் பூசிய காதம்பரி..
நீயடி..
நிம்மதி தரும் நீலம்..
நித்தம் தோன்றும் வானவில்..
நீயடி..
மெல்ல பேசும் புல்லாங்குழல்..
காற்றில் முளைத்த ஊதாப்பூ..
நீயடி..
சிறு சிறு பாவனைகள் செய்து
காகிதங்களில் கடலென எழுகிறாய்..
எளிமையான அழகினிலும்
புதிய மாயங்கள் புரிகிறாய்..
அன்று இலக்கியத்தில்
குறிஞ்சியின் நிறம் நீலம்..
இன்று இலக்கணத்தில்
அழகின் நிறம் நீலம்..💙
மழைக்கால நீலக்குருவி
காற்றில் சிறகடிக்க
நெஞ்சாங்கூட்டில் ரீங்காரம்.. 🎶
அழகிய செவ்விதழ்கள்
மகரந்த சிரிப்பை உதிர்க்க
இதயத்தில் கட்டியது கூடாரம்..🏠
No comments:
Post a Comment