
செம்பருதி கதிர்கள் எழுப்ப..
கண்விழித்த பொழுதுகள் எல்லாம்..
நித்தம் சுடுகின்றன..
செம்பருத்தி இதழ்களின்
மெல்லிய அலார சிரிப்பினில்
கண்விழித்த பொழுதுகள்
ஏனோ குளிர்கின்றன..
சுழியில் சிக்கும் படகு
ஓர் நாள் கரை ஏறும்..
வளைந்த ஒற்றை முடியின் சுழியில்
சிக்கிய இதயங்கள் உனை சேரும்..
நெற்றியின் ஓரத்தில்
கற்றை மேகங்களை
அடுக்கி வைத்தாய்..
பிறையில் குளிர் காயும்
கருமேகங்கள் அழகு..
உன் புருவங்களின்
அடர் மையின் வண்ணம்..அதை..
எட்டாம் நிறமாக
சேர்க்க சொல்லி..அந்த வானவில்
சத்தமாக ஓர் யுத்தம் செய்ய..
கொட்டியது மழை..
இதயம் கிழிக்கும் கூர் விழிகளில்
இல்லையே பிழை..
உன் பார்வை..உன் புதுமை..
உன் தோற்றம்..உன் அழகு..நீ..
இதயம் கீறுவது இயல்பு..
உதிரம் மாறாக
கவிதை கசிகிறதே..விந்தை !
உன் விழிகள் பேசும் பாஷைகளில்
அழகின் வாசம்..
உன் இமைகளின்
இடைவெளியில் பயணித்தால்..
காகித பூக்களிலும்
ரோஜாவின் வாசம்..
பேசாத உன் மௌனப்பார்வைகள்
நெஞ்சோரம் ரகசியங்கள் பேசும்..
அதில் என்றும் மாறா நேசம்..
எங்கு நீ பார்த்தாலும்..
அங்கே அழகின் விளைச்சல்..
உன் விழி என்ன இசைக்கருவியோ ?
பார்த்ததும் நெஞ்சுக்குள்
காட்டருவியின் சத்தங்கள்..
அங்கே இங்கே நகர விடாது..
இதயத்தினில் இறுக முடிச்சு
ஒன்று விழுகிறது..
திணறும் இதயத்தில்..உன் கையினை
இறுக்கிய தங்க இலைகளின் 🍂
கூச்சல்கள் கேட்கிறது..
அணிகலன் புதுமை ! 👌
இருளில் முளைத்துவிட்ட
மஞ்சள் வெயில் போல்..
உன் ஆடையின்
தங்க கோடுகள் அழகு..
ஆரஞ்சு தோட்டங்களுக்கு
பிரேசில் தான் பிரசித்தம்..
நீயோ மிக எளிதாக
உன் நகத்தினில்
நட்டு வைத்து விடுகிறாய்..
காதோரம் காதணிகள் அணிவரிசை..
அதில் கேட்குதே
புதுமைகளின் அலைவரிசை..
உன் மரங்கொத்தி விழிகள்
இதயங்களை அழகாய் செதுக்குகின்றன..
சிற்பி தோற்றான் போ..
சிரிக்கவா..வேண்டாமா..
நீ யோசிக்கும் நொடிகளில்..
இதயங்களில் சிறு பிரளயம்..
உன் விழிகள் பார்த்த காகிதங்களுக்கு..
நிலாச்சோறு உண்ணும்
மழலையின் மகிழ்ச்சி..
அழகழகாய் பார்க்கும் போது..
பார்வைக்குள் கொஞ்சம்
வசியம் வைக்கிறாய் போல்..
வழி மறந்து..உன் பின்னே தொலைந்த
இதயங்கள் வீடு திரும்பவில்லை..
உனை தேடியே என்றென்றும்..
No comments:
Post a Comment