அழகிய ராட்சஷி


போதை கொண்ட விழியுண்டு
மழலையை போன்ற மொழியுண்டு

பல்சுவை அறிய இதழ் உண்டு
மிரட்சி தரும் கானியுண்டு

இனிக்கும் பெரும் கவியுண்டு
கவிதையாய் அவள் பொருளுண்டு

கற்கண்டு கண்ணமுண்டு
கற்பனையை விஞ்சிய வஞ்சியின் வடிவம் உண்டு

அழகு உண்டு அன்பு உண்டு
அத்தனைக்கும் மேலாய்

அவளுக்கு தங்க நிற
சிறகுகளும் உண்டு

ஆயிரம் தேவதைகளின்
அழகை எல்லாம் விழுங்கிய
ராட்சஷி

No comments:

Post a Comment