
கனவான என் வாழ்வில் கனவே வாழ்வாக...
கண் மூடும் நேரத்தில் கனிவாக வருபவளே...
என் உள்ளம்தனை வருடுகின்றாய்..
உறங்கிப் போன என்னில் உணர்வினைத் தந்து...
என்னை உயிர் கொள்ளச் செய்கின்றாய்!!
ஊணமான என் மனமும் வாழ்வும்...
உறைந்த என் உதிரமும் இன்னும்...
உன் வருகையால் உவகை கொள்கின்றதே!!
கள் கொண்ட இதழால் கனிரசம் தரும்...
முள்ளற்ற ரோசாவே கள்ளமற்ற உன் பேச்சும்...
கலங்கமில்லா உன் அன்பும் காந்தமாக ...
இரும்பான என் இதயத்தினையும் ..
ஏங்கிட வைக்கின்றதே என்னவளே!!
கனவில் வந்து கண்ணாமூச்சி ஆடாது...
கண்ணெதிரே வாடி என்னவளே!!
காலமெல்லாம் வாழ்வோம் கண்ணும் இமையுமாக !!
காதல் தேவதையாக வருவாயா இல்லை...
கனவாகவே மறைவாயா என்னவளே??
No comments:
Post a Comment