
தென்றலாய் தீண்டி
உன் மேலாடை பறக்க விடவா
கன்னலாய் மாறியுன்
கடும் தாகம் தணித்து விடவா
என் சூடிதார் சுந்தரியே...
நீ நடந்தால் ஆயிரம்
அன்னங்கள் உன் பின்னாலே
நீ ஓடினால் அழகு
ஊர்வசிதான் என் கண் முன்னாலே
பாவை உன் காதல் வேண்டி
பல்லாண்டு தவமிருப்பேனெனினும்
தேவையுன் ஓரக் கண் பார்வை என்
பாவி மனதிற்கு கிரியாஊக்கியாய்...
No comments:
Post a Comment