
போதவில்லையே கண்கள்
போதவில்லையே...
இவள் கண்கள் அன்றி
போதை ஏதுமில்லையே!!!
போதவில்லையே மின்னும் மின்னல் போதவில்லையே...
அவள் சிரிப்பில் தீரும் இன்னல்
போதவில்லையே!!!
போதவில்லையே அவள் இதழோரம் சிந்தும் நாணம்
போதவில்லையே...
அதில் கரைந்தோடும் நெஞ்சம்
காணவில்லையே!!!
போதவில்லையே அவள் கண்ணின் மை போதவில்லையே..
அதை தேடி சென்ற என்
தூரிகை மீளவில்லையே!!!
போதவில்லையே அவள் இமைகள்
பேசும் பாஷை போதவில்லையே...
ஆங்கே ஒட்டி கொண்ட நிலவின்
பிறை தேயவில்லையே!!!!
போதவில்லையே அவள் கூந்தல்
சேர்ந்த மல்லி மணம் போதவில்லை...
அதை கட்டி வைக்க அவள் குழலின்றி சிறை வேறில்லையே!!!
போதவில்லையே நொடிகள் போதவில்லையே..
அவள் கைகக்கடிகாரம் சேர்த்திட்ட
மணித்துளிகள் தீரவில்லையே!!!
போதவில்லையே அவளை ஒட்டி
கொண்ட பொட்டு போதவில்லையே...
அதற்குள் அவள் பூட்டி வைத்த
புட்டு ஒன்றில்லையே!!!
போதவில்லையே கண்கள்
போதவில்லையே...
இவள் கண்கள் அன்றி
போதை ஏதுமில்லையே!!!
No comments:
Post a Comment