உயிர் உறைந்தது




கண்ணாடி பொம்மை ஒன்று
உயிர் பெற்ற அதிசயம் பாரீர்..

அவள் கண்ணசைவில்
ஒளிந்து கிடக்கும் ஆயிரம் தனை கேளீர்..

குரும்பு பார்வையில் அரும்பு
இதயங்களை தட்டி எழுப்பி
கைதாக்கிட்டாள்...

முல்லை சிரித்தால் எப்படி
இருக்கும்..
கண்மணி உனை போலவே
அது இருக்கும்!!

ரோஜா சிலிர்த்தால் எப்படி
இருக்கும்...
நீ நாணப்பார்வையை பார்த்தால்
பதில் கிடைக்கும்!!!

காற்று உறைந்தால் எப்படி
இருக்கும்...
உன் புகைப்படம் காணுகையில்
மானுட மனம் படித்திட சொல்
பதில் இருக்கும்!!!

நிஜங்களை நிழலாட செய்வதில்
பிரியா நீயே சிறப்பானவள்!!!

No comments:

Post a Comment