
கலாப இமைகளால்
மழைச்சாரலை அழைக்கிறாய்..
கனவு தேசங்களை
கண்ணுக்குள் சுமக்கிறாய்..
உன் வண்ண விழிகளின்
நிறம் கண்டே..
அந்த வானவில்லின்
சாயங்கள் ஓய்வதில்லை..
உன் கன்ன சிவப்பின்
நாணம் கண்டே..
அந்தி வானத்தின்
செந்நிறம் தேய்வதில்லை..
கரை தொட்டு..
கடல்மண் அள்ளிச்செல்லும் அலை போல்..
இதயம் தொட்டு..
நினைவுகளை அள்ளிச்செல்கிறது
உன் சிற்றலை சிரிப்பு..
மேகம் உரசும் மின்னல் போல்..
நினைவை உரசி செல்கிறது
உன் மின்மினி விழிகள்..
நதியாய் நீளும் உன் புருவங்கள்
நெஞ்சோரமே முடிகின்றன..
நாணலாய் வளையும் இமைகளுக்குள்
பிரபஞ்ச அழகுகள் தெரிகின்றன..
No comments:
Post a Comment