
ஓர் பால் நிலா..
பூமியில் உலா!!
அவள் கார்க்குழல்
கருமேகத்திரல்!!!
அவள் புன்சிரிப்பு
பொன்நகையினும் சிறப்பு!!!
அவள் எளிமை
என்னை வியக்க வைக்கும்
புதுமை!!!
அவள் கபடமில்லா பார்வை
அதில் களவு போன பாவை
நான்!!!
வெட்டி எடுத்து ஒட்டிய
பிறை இவளின் இமை!!!
இதுவே குறையில்லா உவமை!!
இவள் வஞ்சகக்காரி
இப்படி வஞ்சனை இல்லாமல்
கவியினை தொடுக்க வைக்கிறாள்!!
நான்(நாம்) பாவமில்லையோ
பாவை இவளுக்கு அது
புரியவில்லையோ???
No comments:
Post a Comment