
*********************
உன்மேல் நான் வைத்த ...
மாசற்ற அன்பால் நான் இன்று...
வார்த்தைகளை தொலைத்து ...
மௌனித்து நின்ற பொழுதுகள்தான் எத்தனை??
வாழ்வில் வரமே சாபமாக...
நம் உறவே கேள்விக்குறியாக...
என் மனமே எனை கொல்ல..
விடையற்ற கேள்வியாக...
எத்தனை மாற்றங்கள் உன்னிடம்...
எனை ஒரு நொடி கூட நினைக்காத...
உன் மேல் நான் வைத்த நேசத்தால்...
எத்தனை ஏமாற்றங்கள்..எத்தனை வேதனைகள்!!
வெறுத்து ஒதுக்கும் உன்னிடம் ...
ஒரு துளி இரக்கம் பிறக்காதா??
என் வாழ்வு விதி வழி...
உன் வாழ்வு என்றும் ஒளி வீசீட..
வாழ்த்தி விடை பெறுகின்றது என் இதயம்!!
No comments:
Post a Comment