
அடித்தால் தானே வலிக்கும்
ஆனால் அவள் மட்டும் எப்படி முடிந்தது
அடிக்காமலே வலிக்க செய்யா?? ...
அவளோடு சேர்ந்து
அதிக தூரம் பயணிக்க ஆசைப்பட்டேன்.
ஆனால் அவள் என்னைவிட்டு
அதிக தூரம் சென்றுவிட்டாள்.
இவ்வளவு சுயநலம் கொண்டவளை
எப்படி என்னுயிர் என்று எண்ணினேன் தெரியவில்லை .
எங்கு சென்றாலும் அழைத்து சென்றவள்
எப்படி விட்டுச்சென்றாள்
என்னை மட்டும் இந்த மண்ணுலகத்தில்..
எங்கு போனாலும்
எனக்கு முன் சென்று காத்திருந்தவள்
இப்போதும் சென்றுவிட்டாள். எனக்கு முன்
விண்ணுலத்தில் காத்திருக்க ..
No comments:
Post a Comment