வஞ்சி மகளோ??




ஈரக்காற்றே எங்கிருந்தாய்...
என்னில் முளைச்ச நாற்றை
கண்டறிந்தாய்...

வாச பூவே எங்கிருந்தாய்
இவள் வாசம் ஏனோ கண்டறிந்தாய்...

நெஞ்சில் சிறுக நிறைந்த
யாஞ்சி இவளோ...

கண்ணில் மறைய மறுத்த
வஞ்சி மகளோ???

குளிர் வாடை காற்றுக்குள்
பனி போர்த்திய பாவை இவளோ???

வெயிற்கால வேளையிலே
பரி பூட்டிய விழி உனதோ???

நெடுவயலாய் எம் நெஞ்சம்
படர்ந்து செழித்த நீயோ
நெல்மணி என இதயம் கொஞ்சும்...

சில வேளை மிஞ்சும் அது உனை காண என்னிடம் கெஞ்சும்..

கனா காணும் இந்த பாவி
நெஞ்சம்..
பாவை உன்னை கண்ட பின்னே..

தமிழ் தேடி தஞ்சம்!!!

வட்ட மதியை தட்டி எழுப்பி
வெட்க சிரிப்பில் சிறை பிடிப்பாய்...

கொட்டி கிடக்கும் கார்முகிலை கூந்தல் கொண்டே...
அதை உடைப்பாய்!!!

வர மறுக்கும் வானவில்லும்
நிறம் தொலைத்து உருவெடுக்கும்...
காரணம் கேட்டால் உன்னை
நோக்கி படையெடுக்கும்!!!

அல்லிக்கு பதில் சொல்லி முல்லைக்கு தூது விட்டேன்...

அல்லி மல்லியும் அயர்ந்தே போச்சு...
முல்லை எங்கோ தலை மறைவாச்சு...

போதும் பிரியா பூலோக நியதியை மாற்றி விட்டாய்...

பூரிப்பில் என்னை சாய்த்து விட்டாய்...

நீ அழகின் உச்சம்
என் கவிதை உன்னையன்றி யாருக்கும் இல்லை மிச்சம்!!!!

No comments:

Post a Comment