உனக்காக ஏங்கும் இதயம்



துளியாய் நீ வீழத் தான்
மண்ணாய் நான் ஏங்கினேன்
வருகை உனக்காகத் தான்
வறட்சியில் நான் வாடினேன்
தளிர்கள் நீ தரத்தான்
இலைகள் நான் உதறினேன்
உயிராய் உனை எண்ணியே
வலிகள் நான் தாங்கினேன்

இப்படிக்கு
உனக்காக ஏங்கும் இதயம்😍

No comments:

Post a Comment