
சில நேரம் உன் மெளனம்
பிடிக்கும்
சில நேரம் உன் கோபம்
ரொம்ப பிடிக்கும்
உன் நல்ல குணம் பிடிக்கும்
உன் கெஞ்சல் பிடிக்கும்
நீ எனக்கொன்று சொல்லும்
வார்த்தைகளை பிடிக்கும்
என்னை எனக்கே உணர
வைத்த உன் அன்பை பிடிக்கும்
ஒவ்வொரு முறையும் தோற்று
தான் போகிறேன்
உன்னுடன் பெரிய சண்டை
வேண்டுமெனும் என் ஆசையில்
தோற்பது நானென்றாலும்
வென்றது உன் அன்பு
நான் உன்னோடே என்றும்
நீ எனக்கு மட்டுமே
என்றென்றும்..♥️💕
No comments:
Post a Comment