உன் ஞாபகம்



சட்டென முந்தானைப்பற்றி
இழுத்து என்னமா
மழைவரும் போதெல்லாம்
ஏதோ ஓர் உலகத்துக்குள்
போனது போல்
பிரமித்து உன்னையே மறந்து நிற்கிறாயென்று
மகள்கேட்டிடும் பொழுது
உன் ஞாபக
குடையிலிருந்து விலகி
நிஜங்களின் அறையை நோக்கி நகர்கிறேன்
விழியின் ஓரம்
ஈரம் சொட்ட சொட்ட...!

No comments:

Post a Comment