அவளும் அழகும்


உன் சிகையினில் நனைந்த மேகம்
தன்னை துவட்டி கொள்ள மறுத்தது..
உன் அழகினில் மீண்டும் மீண்டும்
நனைந்திடவே மழையென
மாறி பொழிந்தது..🌨
நீரலையில் நீ நீந்தும் போது
அலைகளின் அழகு
உன் சிற்றலை சிரிப்பிற்கு
முன்னே தோற்றே போகிறது..🤩🤩
நீ செங்கடல் என
உன் டால்பின் விரல்கள் 🦈
உன்னை நோக்கி குதித்தன..
அரபிக்கடலின் அழகை எல்லாம்
அரை நொடியில் தூக்கி எறிகிறது
உன் ஆலிவ்பூ தோற்றம்..⚘⚘
உன்னை பார்த்தாலே காகிதங்கள்
கவிதைகளாக மாற்றம்

No comments:

Post a Comment