
நுரையீரல் தீண்டி
செல்லும் காற்று..
உன் விழிகளில் இருந்தே
அனுப்பப்படுகின்றது..💙
இதயங்கள் துளைத்து
செல்லும் தோட்டா..
உன் பார்வையில் இருந்தே
புறப்படுகின்றது..❤
உன் பார்வை
என் காகிதங்களின் பாஷை..🎼
உன் விழி
என் கவிதைகளின் மொழி..🎶
உன் கண்களில் ஊரும்
அழகினை பருக
அந்த கங்கை தாகம் கொள்ளும்..💚
உன் சிகையினில் நெளியும்
அலைகளில் நனைய
அந்த மேகம் மோகம் கொள்ளும்..💜
அழகின் அழகினை
ஆர்ப்பாட்டம் இன்றி சொல்கின்றன
உன் மெல்லின பார்வைகள்..👌
அழகின் மொழியினை
ஆராதிக்க செய்ய சொல்கின்றன
உன் புதுமை தோற்றங்கள்..👌
காணும் இதயங்களை
கட்டிப்போடும் கண்கள் உனது..😍
நீலத்தை பிரிந்த வானம்
உன்னோடு வரவே விரும்புகின்றது..💙
கடலில் தவழும் அலைகள்
உன் கண்கள் மேலே வளைகின்றது..🌊
உன்னை பார்க்கத்தான்..
படம் பிடிக்கத்தான் திட்டம்..
நீயோ உன் விரல்களால்
விசைப்பலகை வாசித்து நின்றாய்..🎹
உன் சேராத
இமைகளின் அழகினில்
ஆறாத காயம் ஆறும்..😊
உன் மாறாத
இதழோர புன்னகையில்
தீராத ரணமும் தீரும்..😊
உன் ஈர விழிகள்
கைப்பிடி இதயத்திற்குள்
மழை பொழிகின்றன..🌧
உன் மௌனப்பார்வை
நினைவுகள் நனையாது
குடை பிடிக்கின்றன..☔
உன்னை பற்றி கிறுக்கினாலே
அது சிறு கவிதை..🖍🖍
உன்னை பற்றி நினைத்தாலே
அது அழகிய கனவு..💥
ஏனோ ஏனோ..
நீ ப்ரியா என்பதாலோ ? 💙
No comments:
Post a Comment