
சிரித்த விழியோரம் கசியும் மை..
அழகின் கர்வக்ரீடங்களை
அணிந்து கொண்டது..
இந்த இயந்திர உலகில்
இதயங்கள் எதையோ தேடி தேடி
ஓடிக்கொண்டே இருக்க..
பிரம்பஞ்சம் எங்கும் நெரிசல்..
அழகிய சிவப்பு சிக்னல்
ஒன்று கண்முன்னே விழ
ஓர் நொடி ஸ்தம்பித்தன இதயங்கள்..
பரபரப்பான வாழ்வின் நடுவே நித்தம்
இவளது புன்னகையே வேகத்தடை..
அவள் நிற்கும் அழகினில்..
தோற்று போகும் கம்பீரம்..
அவள் பார்க்கும் நொடியினில்..
நெஞ்சோரம் நேசத்தின் ஈரம்
No comments:
Post a Comment