
உன் புத்தம் புது தோற்றம்..
இதயங்களில் வேதியல் மாற்றம்..
உன் நங்கூர விழிகள்
இதயத்தில் ஈட்டியினை
இறக்குகின்றன..
அந்த ஆழங்களில் சில
கவிதை பொக்கிஷங்கள்
கிடைக்கின்றன..
சுடச்சுட பார்வைகளை
பரிமாறுகிறாய்..
கொதிக்கும் நெஞ்சங்கள்
பொசுங்கி சாகும்..
துப்பாக்கி விழிகள் பாய
சிதறி துண்டாகும்
இதயங்கள் பாவம்..
இப்படித்தான்..
உதிரம் இல்லா சைவ கொலைகளை
பதற்றமில்லாமல் செய்கிறாய்..
வீழும் நெஞ்சம்..உன்னிடமே தஞ்சம்..
No comments:
Post a Comment