
இமை மூடிய இருளுக்குள்
வெள்ளை பௌர்ணமியை
வைத்து செல்கின்றன
உன் மூக்குத்தி மின்னல்கள்..
இருதயத்தின் இருட்டு அறையில்
வெளிச்ச பூக்களை
தூவி செல்கின்றன
உன் மூக்குத்தியின் மிளிர்..
தூக்கணாங்குருவிகளின்
கண்களில் பட்டு விடாதே
தன் கூட்டுக்குள் ஒட்டி வைக்கும்
மின்மினி என..
உன் சிரிப்பினை
களவாடி செல்லக்கூடும்....
No comments:
Post a Comment