கண்களில் கலவரம்


ஓயாத மின்னல் இவள்
கண்ணில்..
ஓய்ந்தாலும் மின்னும்
வண்ணம் இவள் எண்ணம்..
அவள் கூர்விழிகளின் நாயணம்
பல நூறு இதயங்களை கூறு போட்டு
போகிறது..
தலையாட்டி பார்த்தாள் தஞ்சையின்
வரலாறு பிறந்த இடமோ
என்னவோ??
அவள் ஒற்றை சிரிப்பில்
கற்றை கனவுகளை கண்ணோரம்
வீசி போகிறாள்..
அவள் விழி இமைகளில்
மயிலிறகின் வாசம்..
தோகையை பரிசளித்தது
இவளன்றோ??
ஓரமாய் ஒதுங்கிய சின்ன
கன்னக்குழி..
ஆங்கே நிறைந்தது கவிஞனின்
எண்ணத்துளி!!!
பிறைநெற்றிக்கு நடுவே
பௌர்ணமி ஒத்திகை..
இதழ் இரண்டுக்கும் நடுவே
வைகையின் பாத்திகை...
கருவிழி இரண்டிலும்
கருமேகம் குடி வந்ததோ??
எள்ளுபூநாசி ஆங்கே கிளிகள்
வந்து தஞ்சமானதோ???
ஒயிலாடும் லோலாக்கு
குயிலோடு
சேர்ந்ததோ??
குயிலோடு சேர்ந்ததால்
மயில் தலை சாய்ந்து நின்றதோ???
அது தமிழை வென்றதோ!!!

No comments:

Post a Comment