
இமையும் சரியும்..
இளவேனிற் வருடும்..
கலாப சிறகும்
கண்ணில் படரும்..
நெருப்பின் நிறமும்
நெஞ்சை நெருடும்..
விழிகளுக்கு மேலே
பிறை ஒன்று விரியும்..
மலை முகடுகள் நடுவே
சிவப்பு சூரியன் மறையும்..
மருதாணி தோட்டம்
இதழினில் தெரியும்..
திருவிழா கொடை இரண்டு
முத்துக்கள் சூடும்..
காதோரம் கதை பேசி
அழகாய் மெல்ல ஆடும்..
பேசா மௌனங்கள்
காகிதத்தில் பேசும்..
கவிதையாய் மாறி
தென்றலென வீசும்..
தவழும் கருமேகங்களின்
சொல்லா நேசம்..
எழுத மறந்து போனால்
இயற்கை என்னை ஏசும்…
No comments:
Post a Comment