கரையோர கடல் கன்னி


அந்தியில் மலர்ந்த செவ்வானமோ
திகைப்பில் நானோ செவ்வானம்
சேலையை கட்டி வந்த தித்திப்பில்!!!
அலை அலையாய் மனதோரம்
வீசும் கடற்காற்றும் இந்த சோலையின்
வாசம் தீண்டி வந்து எனை சாய்க்கிறதே!!!
பரிதி தோற்று போவான் உதிக்கும்
வேளையில் இப்படி ஒரு எதிர்பாரா திருப்பம்!!!
ரசிக்க வந்தவரோ வழி மாறி
விழிகள் இவள் மீது மோதி
ஆச்சர்யத்தில் உறைந்த நிலை!!!
மனங்கள் மட்டும் அல்ல கடற்கரையில்
தஞ்சம் கொண்ட சிற்பியும் தான்!!!
சிற்பத்தை செதுக்கி நின்ற சிற்பியும் தான்!!!
பாறையின் இடுக்கில் துளிர் விட்ட
தளிராய் இவள் வந்து நிற்க
சுற்றி வந்த நாரையும் அன்னமும்
வியப்பில் ஒருகணம்!!!
உன் குழல் மோத அலைகளுக்கு நடுக்கம் ஏனோ...
பிரியமானளே உன்னால் சிறை செய்யக்கூடும்!!!
இறக்கை இருந்தால் தான் தேவதையாம் இதோ இன்று புரியும் இவள் கை விரித்து கரையோரம்
நினறாள்!!!
ஆயிரமாயிரம் மின்மினிகளும்
வண்ணத்துப்பூச்சிகளும் காதல் காவியம் ஏற்றும்!!!
பிரியா பிரியா இதை விட வேறு எதையும் நான் அறியா!!!
மூன்றெழுத்து மந்திரம் போதும்
ஏழு ஜென்மம் தீர்ந்திடும்!!!
கரை சேர நான் விரும்பவில்லை
விழுந்தது கடலில் அல்ல
இவள் மீது கொண்ட நேசத்தில்!!!

No comments:

Post a Comment