யார் இவளோ



புன்னகைதேசம் உன்
இதழோரம் தெரிகிறதே..

பூக்கள் எல்லாம் உன்
விழிகளில் மலர்கிறதே..

பார்க்கும் பார்வைகள்
வாடைக்காற்றாய் உருமாறி
இதயம் வருடியதே..

சிரிக்கும் சிரிப்பெல்லாம்
மின்னல் பூக்களை கண் முன்னே
கொட்டி செல்கிறதே..

உன் விழிமை
நேசக்கோடுகளை தீட்ட தீட்ட..

பிரபஞ்சம் உன்
அழகினில் தோற்க தோற்க..

யாரோ யார் நீ..

ஊஞ்சலோடு படரும் மேகம் நீ..
நெஞ்சோடு தொடரும் நிழல் நீ..

அழகின் முகவரி நீ..
காகிதங்களின் முதல் வரி நீ..

No comments:

Post a Comment