
விரல்கள் கோர்க்கும் நிமிடங்கள்...
விரைவில் வர வேண்டும் உயிரே!!
தினம் தினம் உன்முகம் காணாது...
தாய் முகம் தேடும் சேயாக நானிங்கு...
நோய் கொண்டு வாடுகின்றேன்...
தாயாக வந்து விடு என்னுயிரே!!
கவிதையிலும் கற்பனையிலும்...
நீயும் நானும் கருவும் பொருளாகவும் ...
நீங்காது உறவாடினாலும்...
நுரை தின்று பசியாறுமா என்னுயிரே??
நாடியே வந்திடு சோடியாக நாமிருவரும்...
விரல் கோர்க்கும் நிமிடங்கள் ...
தூரத்தில் இல்லை துன்பம் தீர...
தாரமாகி விடு தாங்கிடுவேன் .....
என்னுயிராக உன்னை !!
No comments:
Post a Comment