இராட்டின பெண்


நில்லாது நெஞ்சோரம்
சுற்றிக்கொண்டே இருக்கும்
ராட்டினப்பெண்ணே..

விண்மீன் விழிகளால்
இதயம் திருடும்
குறும்புப்பெண்ணே..

உன் படிகம் பூசிய பார்வைகளால்..
இதயத்தின் இருட்டு அறையில்
வெளிச்சக்கீற்றுக்கள்..

பூவின் இதழ்களை சிதறச்செய்யும்
வாடைக்காற்றை போல்..
நினைவுகளை சிதறச்செய்கிறது
உன் கருவிழி..

உன் கண்ணின் அடர் மை..
மறந்து போனது மெய்..

மார்கழி பனிதூவல்களை கையில் அள்ளி
முகம் கழுவிக்கொண்டாயோ ? 🤔
உன் சிலிர் பார்வைகளுக்குள்
குளிரும் தஞ்சம்..
உன் வெண்பனி சிரிப்பினில்
சறுகுது நெஞ்சம்..💚

இமைகளுக்குள் மிதக்கும் கனாக்கள்..
விழிகளுக்குள் பதுங்கும் வினாக்கள்..
வினா தேடி அலையும் காகிதகம்..
விடை சொல்ல மறுக்கும் நீ..

No comments:

Post a Comment