வசியம் கொள்கிறாள்




கொட்டும் உன் கற்கண்டு சிரிப்பில்..
அந்த காபி தான் கசந்திடுமோ ?

மின்னல் முகம் நெஞ்சில் அறைய..
விழி மூடா இமைகள் உறங்கிடுமோ ?

உன் ஒயிலின் தோற்றத்தில்..
உன் புதுமையின் சீற்றத்தில்..
தடுமாறும் இதயங்கள்
நினைவுகள் இழந்திடுமோ ?

ஆயுதம் இன்றி அழகால்
மெல்ல கொல்ல
உன்னாலே முடிகிறது..
இந்த பவளப்புன்னகையில்
பிரபஞ்சம் வெல்ல
உன்னாலே முடிகிறது..

அழகின் சாயலை
உன் வசமாக்கி கொள்கிறாய்..
சிரிப்பின் மாயத்தை
உன் இதழினில் புரிகிறாய்..

No comments:

Post a Comment