
நறுமுகையே பனியில் நனைந்து
பசுமை சூழ்ந்து உன்னை
பசுமையின் தேவதையாக்கிய
மழை பாசிக்கு நன்றி...
கனவை கலைத்து என்
கண்மணிக்குள்
விழுந்த முதல் மழை நீ...
நினைவை தொலைத்து
என் நிகழ்கால நிமிடங்களில்
இடம் பிடித்து கணத்திற்கு
ஒருமுறை மனதை கட்டி போடுபவள்
நீ...
செய்வதெல்லாம் நீ செய்கிறாய்
சிறப்பாய்..
கவிதைக்கு கவிதை தேடி
நான் அலைகிறேன்
பொருப்பாய்!!!
No comments:
Post a Comment