
சுத்துதே ஒரு பெண்ணிலா
அவள் கண்ணிலே வெண்ணிலா
நான் சிக்கி தவிக்கும் மின்னலா???
இமைக்காதே விழி நீரெல்லாம்
அருவியாய்..
சிரிக்காதே சிரிப்பலை எல்லாம்
கருவியாய்...
துளைக்குதே இதயத்தை
கருவிழி என்ன கத்தி முனையா???
முத்தமிழ் தவழ உன் இதழ்
தான் குடிலா???
பருதியை பறித்து பால்நிலவுக்கு
தோடு..
செங்குன்றம் தானோ உன் கார்குழலின்
பூக்காடு!!!
மையிட்டாரோ விழி மையினில்
நெஞ்சம் தனை கைதிட்டாரோ???
சிதறி போகும் குழல்
சிக்கி போகும் காற்றோ ஆங்கே
எழுதும்
ஓர் மடல்...
பறிக்க தான் பிறந்தாயோ???
பிரியா இதயங்களை பறிக்க தான்
பிறந்தாயோ???
தங்கசரிகை நூலாடை
நெய்த்திட்ட திறமைக்கு
கவி கொண்டு ஓர் பொன்னாடை!!!
ஊரெல்லாம் சுற்றி திரிந்து
ஓய்வினில் விழிக்களுக்கு
அளித்தாய் ஓர் விருந்து!!!
No comments:
Post a Comment