முதல் காதல்



வார்த்தைகளால் சொல்லமுடியாத
வலிகளை, அவள் கன்னத்தில் வழிந்தோடும்
கண்ணீர் புரியவைத்தது.
அவளின்
முதல் காதல் கொடுத்த காயங்கள்
முழுமையாய்  ஆறவில்லை என்பதை ...

வாழ்க்கையை
முழுமையாய் வாழ்கிறேன் என்பவர்களிடம்  கூட
முள்போல் குத்திக்கொண்டுதான் இருக்கிறது
மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் அந்த முதல் காதல்..

முதல் காதல் தோல்வி என்று வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி வைத்தால்... என்றோ
முடிந்த்திருக்கும் இந்த முரண்பாடு கொண்ட உலகம் .


No comments:

Post a Comment