
⚘நீ என்னிடம் எதை வெளிப்படுத்துகிறாயோ
அதுவாகவே நானும் இருப்பேன்.
எதையுமே மறைத்து காட்ட தெரியாத உண்மை
விம்பத்தை மட்டுமே காட்டும் கண்ணாடி தான் நான்⚘
⚘உன் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தே
நான் என்னையே பிரதிபலிக்கிறேன்.
நீ சிரித்தாலோ அழுதாலோ கோபப்பட்டாலோ
எதுவானாலும் நான் நீயாகவே மாறுவேன்⚘
⚘உன் எல்லா அளவையும் கோபத்தையும் உன்னை
அறியாமலே நீ எனக்கு காட்டுவாய் - உன்னை
ஒரு போதும் இன்னொருவருக்கு என்னால்
விட்டு கொடுக்க முடியாது⚘
⚘என்னை நீ தூக்கி எறிந்து காயப்படுத்தினாலோ
உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்.
நானே உடைந்து போவேன்⚘
No comments:
Post a Comment