காலை காதலி


பனி விலகா காலை..
விழிக்க போகும் சூரியன்..
மெல்ல தழுவும் தென்றல்..
அசைந்தாடும் வயலோர நாணல்..
இரவு பெய்த மழையில்
நனைந்து சிரித்த இலைகள்..
விழுந்த துளியின் குளிரில்
சிலிர்த்து நடுங்கும் கிளைகள்..
காற்று எழுப்ப..கண்விழிக்கும் பூக்கள்..
விடிந்து கொண்டிருந்த பகல்..
அழகழகாய் நீ...

தனது அட்டவணையில்..
உனை கேளாமல்
உன் பேரை
இணைத்துக்கொண்டது
இயற்கை..

No comments:

Post a Comment