எதிர் பார்க்கிறேன்



சிப்பிக்குள்
நுழைந்த
நீர்த்துளிபோல்
என்
விழிவழி
நுழைந்து
இதயத்தில்
அமர்ந்தவனே..........
உண்ணமுடியவில்லையடா
உன்னால்......
உறங்கமுடியவில்லையடா
உன்னால்.....

என்
செய்தாய்
என்னை????????

உன்
பெயர்
உச்சரிக்கும்
பொழுதெல்லாம்
என்
மனம்,
கள்ளருந்திய
அணுவாய்
களியாட்டம்
ஆடுகிறதே......

வாசல்
நோக்கியே
தவம்
கிடக்கின்றேன்.......

என்
ஒவ்வொரு
நொடிகளையும்
நீயின்றி
கடக்க
இயலாது
தவிக்கிறேன்.......

நீ
வாழுமிடம்
மண்தரையாயினும்
மகிழ்வோடு
வாழ்வேன்
நீ
என்னவன்
என்ற
ஏகாந்தத்தில்.......

வந்தழைத்துச்செல்......

வீதீவழி
உன்
கரம்கோர்த்து
நடைபயில
மனம்
எத்தனிக்கின்றது........

எதிர்
பார்க்கிறேன்
நீ
வரும்
அந்நந்நாளை.........

No comments:

Post a Comment